சினிமா
சமந்தாவின் ‘யசோதா’வில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்.
சமந்தா நடிக்கும் ’யசோதா’ படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யான்னிக் பென் இணைந்துள்ளார்.
சமந்தா நடிப்பில், பான் இந்தியா படமாக ‘யசோதா’ தயாராகி வருகிறது. இதை ஹரி ஷங்கர்-ஹரிஷ் நாராயண் இணைந்து இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.
திரில்லர் கதையான இந்தப் படத்துக்காக, 3 கோடி ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டல் செட் ஒன்று ஐதராபாத் அருகே அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் இந்த செட் அமைக்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யான்னிக் பென் இணைந்துள்ளார். மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால், அவர் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. யான்னிக் பென்னுடன் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது!
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.