சினிமா
வசூல் மழையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’!
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், உருவாகியுள்ள இந்தித் திரைப்படம், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இதில், அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து தப்பிய சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11-ம் தேதி ரிலீஸ் ஆன, இந்தப் படத்தை, பிரதமர் மோடி பாராட்டிய பிறகு, படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
படம் வெளியான 9 தினங்களில் இந்த திரைப்படம் ரூ.143 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இதன் வசூல் சாதனை ரூ.170 கோடியைத் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜமவுலியின், ‘ஆர்ஆர்ஆர்’ படம் 25-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்குமுன், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம், ரூ. 300 கோடி வசூலைத் தொடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.