சினிமா
இந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

உண்மைச் சம்பவக் காதல் கதையை இந்தியில் இயக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் நடிப்பில் `3′ என்ற படத்தை இயக்கினார். அடுத்து, `வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இப்போது ’முசாபிர்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இந்த ஆல்பம், பான் இந்தியா முறையில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில், இந்த ஆல்பத்துக்கு `பயணி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆல்பம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்திப் படத்தை இயக்க இருக்கிறார். இதை மீனு அரோரா தயாரிக்கிறார். இவர், அமிதாப்பச்சன் நடித்து சமீபத்தில் வெளியான ’ஜுண்ட்’ (‘Jhund) படத்தை தயாரித்தவர்.
“ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது முதல் இந்தி படத்தை இயக்க இருப்பது உண்மைதான். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையிலான காதல் கதை இது. கடந்த சில வருடங்களுக்கு முன் நாடு முழுவதும் பேசப்பட்ட காதல் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது” என்று படக்குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி தயாரிப்பாளர் மீனு அரோரா கூறும்போது, “ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படத்தை தயாரிக்கிறேன். ஆனால், அதுபற்றி இப்போது அதிகம் பேச முடியாது. ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறோம். திரைக்கதையை முடித்துவிட்டு, நடிகர், நடிகைகளை முடிவு செய்வோம்” என்றார். இந்தப் படத்துக்கு, ஒ சாதி சல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
