BREAKING NEWS

சினிமா

நடிகை கியாரா மறுப்பு, சமந்தாவுக்கு வாய்ப்பு.

நடிகை கியாரா மறுப்பு, சமந்தாவுக்கு வாய்ப்பு

இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்க மறுத்ததால், அந்த வாய்ப்பு நடிகை சமந்தாவுக்குக் கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, அடுத்து, பான் இந்தியா படமான ’சகுந்தலம்’ படத்தையும் முடித்துவிட்டார். இப்போது ’யசோதா’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஹாலிவுட் படம் ஒன்றிலும் ராஜ் மற்றும் டீகே இயக்கும் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

கியாரா அத்வானி

இதற்கிடையே பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருக்கிறார். இப்போது, புரி ஜெகநாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, அடுத்து, நின்னு கோரி, மஜ்லி, டக் ஜகதீஷ் படங்களை இயக்கிய, ஷிவ நிர்வாணா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு முதலில் இந்தி நடிகை கியாரா அத்வானியைதான் பேசியுள்ளனர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா, ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சில இந்தி படங்களிலும் நடித்து வருவதால், அவர் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். இதையடுத்துதான் சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )