BREAKING NEWS

சினிமா

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையீடு : தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர்.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையீடு : தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைத் திரையிடுவதால் 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் 1990-ம் ஆண்டுகளில் இந்து பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் அங்கிருந்து இருந்து வெளியேறிய சம்பவங்களை மையமாக வைத்து இந்தியில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விவேக் அக்னிகோத்ரி இயக்கியுள்ள, இந்தப் படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், திரிபுரா உட்பட சில மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளன. வசூலில் இந்தப் படம் சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் இன்று திரையிடப்படுவதை ஒட்டி, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )