சிறுத்தை சுற்றி தெரியும் பகுதிகளில் ஒன்பது மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

மயிலாடுதுறையில் கடந்த ரெண்டாம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் ஆரோக்கியநாதபுரம் சித்தர் காடு உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை தென்பட்டு ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதனைப் பிடிக்க ஆனைமலை ஸ்ரீவில்லிபுத்தூர் முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து.
வனத்துறையினர் முகாமிட்டு மூன்று இடங்களில் கூண்டு வைக்கும் 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் தீவிரமாக தேடி வருகின்றனர் இரண்டு நாட்களாக கூண்டுகளில் சிறுத்தை சிக்காத நிலையில் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்படும் காட்டுக்குள், வனத்துறை சார்பில் மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கோம்பை ராஜபாளையம் டாபர்மேன் சிப்பிப்பாறை போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வகையைச் சேர்ந்த மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காட்டு பகுதியில் தேர்தல் வேட்டை நடைபெற்று வருகிறது. மேலும் கூண்டுகளில் வைப்பதற்காக ஆறு ஆட்டுக் கிடாய்களை வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தை இருப்பதாக கருதப்படும் ஆரோக்கியநாதபுரம் கருவை காட்டு பகுதியில் கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.