BREAKING NEWS

சிறுநீரகப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகி மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரகப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகி மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரகப் பிரச்சினை: பிரபல பின்னணி பாடகி திடீர் மரணம்

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகி சங்கீதா சஜித். தமிழில் மிஸ்டர் ரோமியா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ’தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ உட்பட பல்வேறு ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

கர்நாடக இசைக் கலைஞராகவும் அறியப்பட்ட சங்கீதா சஜித், முன்னணி இசை அமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டில் தங்கி அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது. சங்கீதாவின் திடீர் மறைவால் இசையுலகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. இசைக்கலைஞர்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )