BREAKING NEWS

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் மளிகை கடை நடத்தி வருபவர் ரஹமத்காமிலா இவர் தனது மளிகை கடைக்கு மாதம்தோறும் மின்சார வாரியத்திற்கு கட்டக்கூடிய தொகையை அதிக கூடுதல் தொகையாக வருவதாகவும் அதை சரிவர அளவீடு செய்து பரிசோதிக்குமாறு தேவகோட்டை மின்சார வாரியத்திற்கும் காரைக்குடி மின்சார வாரியத்திற்கும் மனு கொடுத்துள்ளார் அதை சரிவர தேவகோட்டை காரைக்குடி மின்சார வாரியத்தின் அதிகாரிகள் சரிவர பரிசோதனை செய்யாமல் திடீரென்று எவ்வித முன் அறிவிப்புமின்றி மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் பகிர்மான பெட்டியை கடந்த நவம்பர் மாதம் 2023 அகற்றி விட்டார்கள்.

இது சம்பந்தமாக மின்சார வாரியம் சேவை குறைபாடு செய்துள்ளதாகவும் மன உளைச்சல் மனுதாரருக்கு ஏற்படுத்தியதாகவும் இழப்பீடு கோரி ரஹ்மத்காமிலா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தேவகோட்டை ர.லெட்சுமணன் லெ.ரம்யா ஆகியோர்கள் மூலமாக வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் திரு பாலசுப்பிரமணியம் மற்றும் திரு. சாலமன்ராஜ் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு தேவகோட்டை மின்சார வாரியத்தின் உதவி பொறியாளரும் காரைக்குடி மின்சார வாரியத்தின் செயற்பொறியாளரும் இருவரும் சேர்ந்து மனுதாரருக்கு சேவை குறைபாடு செய்வதற்காகவும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் ரூ. 30,000 மனுதாரருக்கு செலுத்த வேண்டும் என்றும்.

கடந்த 2023 நவம்பர் 16ஆம் தேதி முதல் இன்றைய 23.08.2024 தேதி வரை நாள் ஒன்றுக்கு 200 வீதம் ரூபாய் 60 ஆயிரம் நஷ்ட ஈடு மனுதாரருக்கு 30 தினங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் , ஏழு தினங்களுக்குள் மனுதாரருக்கு மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும் என்றும் தேவகோட்டை காரைக்குடி மின்சார வாரியம் ஆக மொத்தம் 90 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் அந்த மாதத்திற்குரிய பயன்படுத்தப்பட்ட 331 யூனிட்டுக்கு மட்டும் உரிய தொகையை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மின்சார வாரியத்தின் முறைகேடு க்கு எதிராக சேவை குறைபாடுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புகார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு தக்கதாக உள்ளது.

CATEGORIES
TAGS