BREAKING NEWS

சிவகங்கை, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி..

சிவகங்கை, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சீனிமடையை கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி மகன் மனோஜ் (13) மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் விக்னேஸ்வரன் (16) ஆகியோர்,

 

 

மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி அருகே இருந்த நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள் அப்போது மர கிளை உடைந்து அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

 

 

இதில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் மனோஜ் மருத்துவமனை கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்னேஸ்வரன் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதனால் தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உடனே மானாமதுரை அரசு மருத்துவமனை வருகை தந்து பதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )