BREAKING NEWS

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ரஜினிகாந்த் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ரஜினிகாந்த் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Sivakarthikeyan With His Wife

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டான்’ படம் கடந்த 13-ம் தேதி வெளியானது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

இதையடுத்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன். சோனி நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தின் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தில் அவர் ராணுவ வீரராக நடிப்பதாகவும் படத்தின் பெயர் `மாவீரன்’ என்று வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் இதைத் தெரிவித்துள்ளார்.

1986-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் ’மாவீரன்’ என்ற படம் வந்துள்ளது. அந்த டைட்டிலில் சிவகார்த்திகேயன் நடிப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )