சீமான் விவகாரம்-நடிகை விஜயலட்சுமி திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்
நடிகை விஜயலட்சுமி 2011 ஆம் ஆண்டு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார்
இந்நிலையில் சீமான் மீது தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து
சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக காவல் துணை ஆணையர் உமையாள் விஜயலட்சுமியிடம்
பல முக்கியமான கேள்விகளை எழுப்பினார். இந்த விசாரணையில் சீமான் தன்னை டார்ச்சர் செய்ததும், கரு கலைத்ததும், மிரட்டியதாக உள்ளிட்ட பல சம்பவங்கள் வெளியாகி உள்ளது.இந்த வாக்கு மூலங்களை போலீசார் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றன.
இதை தொடர்ந்து இன்று காலை செங்கல்பட்டில் இருந்து போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிலா நீதிமன்றத்தில் நீதிபதி பவித்ரா முன்பு ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் அளிக்க அழைத்து வரப்பட்டுள்ளார்.
மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட நடிகை விஜயலட்சுமி நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு கூடுதல் மகிலா நீதிமன்ற பவித்ரா முன்பு ஆஜர் படுத்தப்பட்டு வாக்குமூலம் பெற்றனர்.