சீர்காழி அருகே மேலும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை .தொடரும் சிறுவர்களை தெரு நாய் கடிப்பு சம்பவம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு கிராமத்தைச் சேர்ந்த செங்கல் அறுக்கும் தொழிலாளி ஞானசேகரன் என்பவரின் மூன்று வயது மகன் கடந்த 15 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த சிறுவனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே சீர்காழி அருகே மற்றொரு சோக சம்பவமாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை ஒரே நாய் அடுத்தடுத்து கடித்தது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே மங்கை மடம் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் தர்ஷனை அப்பகுதி தெருநாய் கடித்தது.
அதே தெரு நாய் மற்றொரு சிறுவன் தர்ஷாந்த என்ற நான்கரை வயது சிறுவனையும் கடித்து தற்போது சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீர்காழி அருகே தெரு நாய்களால் சிறுவர்கள் கடிக்கும் சம்பவம் தொடர்கதையாக உள்ளதால் பெற்றோர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.