BREAKING NEWS

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்.

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை உற்சவம்- திரளான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் கோவில் என்று அழைக்கப்படும் லோகநாயகி சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 24 வது தலமாகவும், திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாகவும் இது திகழ்ந்து வருகிறது.

இக்கோயில் மூலவரான திருவிக்ரம நாராயண பெருமாள் தனது இடது காலை ஆகாயம் நோக்கி தூக்கியவாறு காட்சி தருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் பெருமாளின் வலது பாத தரிசனத்தை காணலாம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையிலும் பெருமாள் வீதி உலா நடைபெற்று வந்தது.

நான்காம் நாள் திருவிழாவான நேற்று தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு மாலை சிறப்பு அலங்காரத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க பெருமாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை சேவித்தனர். தொடர்ந்து பெருமாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. பூஜைகளை பத்ரி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

Share this…

CATEGORIES
TAGS