BREAKING NEWS

சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!

சுட்டெரிக்கும் வெயில் பேருந்து நிலையத்தில் நிற்க இடமின்றி தவிக்கும் பயணிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூர் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களின் இணைப்பு பகுதியாக உள்ளது.

ஓமலூர் நகரின் வழியாகவே பெங்களூருலிருந்து தருமபுரி, சேலம்,கோவை, மேட்டூர், ஈரோடு, கேரளா, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் மையப் பகுதியாகவும் அதேபோல ஓமலூரை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு முக்கிய வணிக நகராக உள்ள நிலையில் அரசு, தனியாா் பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று, தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை

மேலும் பயணிகள் அமர்வதற்கு நிழற்கூட வசதி இல்லாததால் தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் சேலம் மாவட்டத்தில் சராசரியாக 108 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பேருந்துகளுக்காக காத்திருக்கும் வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலா் மயக்கமடைந்தும் நிற்க இடமின்றி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் ஆங்காங்கே நின்று பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை இல்லாத நிலையில்

ஓமலூர் பேருந்து நிலைய பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டி சேலம் மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்…

CATEGORIES
TAGS