சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்
நாட்டின் 78வது சுதந்திர தின விழா மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் :-
நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திரத்தை வளர்க்கும் வகையில் வண்ண பலூன்கள் மற்றும் புறாக்கள் பறக்க விடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் தியாகிகளை கௌரவம் செய்தார். பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
CATEGORIES மயிலாடுதுறை