சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கு: பெண் உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டு காவல் நிலைய சரகத்தில் கடந்த 2020‑இல் பதிவு செய்யப்பட்ட சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மணிகண்டன் ,சதீஷ்குமார், கோகிலா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
காட்பாடி, விருதம்பட்டு காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகள் மூன்று பேருக்கு ஆயுள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டார்.
காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தயாளன் மற்றும் மாவட்ட காவல் துறைனரின் பார்வையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விருதம்பட்டு காவல் நிலைய எல்லையில் சுனில் என்கின்ற வினோத்குமார் என்பவரை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் 1) மணிகண்டன் ( 33) த/பெ மாரிமுத்து, திருவாரூர், 2) சதீஷ்குமார் ( 32) த/பெ. சேகர், காங்கேயநல்லூர் மற்றும் 3) கோகிலா, ( 40) க/பெ. இப்ராஹிம்,
காங்கேயநல்லூர், காட்பாடி என்பவர்களுக்கு வேலூர் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் ADJ-1 நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூபாய்.5,000/- அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைதண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
