BREAKING NEWS

சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.

சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் குளித்து நீராடினர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது சுற்றுலா தளமாகவும் ஆன்மீகத் தலமாகவும் உள்ள இந்த அருவியில் வெளிமாநிலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் இருந்ததால் மழை பொழிவு இல்லை ஆகையால் சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலும் நின்றது அதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. தற்பொழுது இரண்டு தினங்களாக மேகமலை அதை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பொழிந்ததால் சுருளி அருவியில் இன்று நீர்வரத்து காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது ஆகையால் இன்று காலை முதல் நீர்வரத்து காணப்பட்ட காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

CATEGORIES
TAGS