BREAKING NEWS

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும், விளங்குவது சுருளி அருவி.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்வதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வந்து செல்வது வழக்கம்.

சுருளி அருவிக்கு ஈத்தக்காடு, அரிசி பாறை பகுதிகளில் உள்ள ஊற்று நீர் மற்றும் ஹைவேஸ் அணைப்பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெறும் தண்ணீர் சுருளி அருவியில் அருவியாய் வந்து கொட்டுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர் வரத்து பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவியில் இன்று நீர்வரத்து துவங்கியது. இதனை அடுத்து விடுமுறை காலத்தில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குடும்பத்துடன் சுருளி அருவியில் குளித்து விட்டு செல்கின்றனர்.

அருவி நீர் வரத்து பகுதிகளில் உள்ள மிதமான மழையில் பெய்து வருகிறது அருவியில் நீர்வரத்து குறைவான தண்ணீர் வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து உற்சாகமாக குளித்துவிட்டு செல்கின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS