BREAKING NEWS

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ்குமார் என்பவரை கோபி மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது

ரகசிய தகவலின் பெயரில் கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பரண்ட் சண்முகம் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் அந்தியூர் முத்துக்குமாரசுவாமி வீதியில் சோதனை நடத்தினர்

அப்போது முத்துக்குமாரசுவாமி வீதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது

அதனைத் தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறையினர் சுரேஷ் என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 600 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

பின்னர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த சுரேஷ்குமார் என்பவரை கைது செய்து கோபியில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

CATEGORIES
TAGS