BREAKING NEWS

சூரியின் கொட்டுக்காளி ட்ரைலர் வெளியானது

விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் வருகிற 23ம் தேதி திரைக்கு வரும் படம் கொட்டுக்காளி. வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. கிராமத்து கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பது போலவும், அதற்கு சிகிச்சை கொடுப்பதற்காக வேலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரி. வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this…

CATEGORIES
TAGS