சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர்.
சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கால்நடை ஒன்று சாலையில் வந்த பெண்ணை கொடூரமாக தாக்கி படு காயம் அடைய செய்தது. தற்போது வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சாலைகளின் சுற்றும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி நகராட்சிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் மாநகர நகர் நல அலுவலர் அருள் நம்பி , சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் , இன்று ரெட்டிப்பேட்டை, வள்ளல் பச்சையப்பன் தெரு, செவிலிமேடு, ராஜாஜி காய்கறி சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மாடுபிடி ஊழியர்கள் உதவியுடன் இன்று 9 மாடுகளை பறிமுதல் செய்து திருவண்ணாமலை உள்ள கோசலையில் ஒப்படைக்க ஏற்றி சென்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் மாடு பிடிக்கும் செய்தி அறிந்த மாட்டு உரிமையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மாடுகளை ஓட்டி சென்ற நிகழ்வும் நடைபெற்றது.
அவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.