சென்னையில் மாலையில் பரவலாக கனமழை
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலையில் பரவலாக கனமழையானது பெய்தது குறிப்பாக
சென்னை, வளசரவாக்கம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், ராமாபுரம், காரம்பாக்கம், ஆழ்வார்திருநகர் மற்றும் ஜெயராம்நகர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கை மழை பெய்து வருகிறது.
மேலும் மாலை வேளையில் பள்ளி கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு செல்லக்கூடிய காட்சி நம்மால் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மற்றும் பிரதான சாலைகளில் மழை காரணமாக மழை நீர் தேங்கி காட்சியளித்து வருகிறது.
இந்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது அதே போல் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், கோவூர் ,மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, வேலப்பன்சாவடி,காட்டுப்பாக்கம், திருமழிசை,நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது