சென்னை போரூர் அருகே நேற்று நள்ளிரவில் பெய்த கன மழை காரணமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்ததில் பரிதாபமாக பசுமாடு,நாய் மின்சாரம் பாய்ந்து பலி..
சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் சாலையில் காலி மனையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் இடி மழை பெய்த நிலையில் மின்சார ஒயர் திடீரென அறுந்து விழுந்தில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த பசு மற்றும் ஒரு தெரு நாய் அதில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடு மற்றும் நாய் உயிரிழப்பு.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் அருந்து கிடந்த மின் ஒயரை சரி செய்த நிலையில் தற்பொழுது உயிரிழந்த நிலையில் பசு மாடும் மற்றும் நாயும் அங்கே கிடக்கின்றது.இப்பகுதி சென்னை திருவள்ளூர் எல்லை பகுதி என்பதால் மாநகராட்சி, வானகரம் ஊராட்சி ஊழியர்கள் அகற்றவில்லை என கூறப்படுகின்றது..மேலும் பசுவின் உரிமையாளர் யார் என்று தெரியாத நிலையில் மாடு அப்புறப்படுத்தாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது..
எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலையில் மின்சார ஒயர் நள்ளிரவில் அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் யாரும் விபத்தில் சிக்கவில்லை என்றலும் பரிதாபமாக இரு வாயில்லா ஜீவன் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.