BREAKING NEWS

செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு!

செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி காலையில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் தெருவில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் மற்றும் முதியோர் இல்லம் செய்யப்பட்டு வருகிறது இந்த மையத்தில் பெண்களும் முதியோர்களும் சரியான முறையில் கவனிக்கப்படுகிறார்களா? அவர்களுக்குண்டான உணவு, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட உடல் நலன் சார்ந்த தேவைகள் குறித்து மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி காலை ஆய்வு செய்தார் . அப்போது தங்கி இருக்கும் பெண்கள் மற்றும் முதியோர்களிடம் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

மையத்தை கண்காணிக்கும் அலுவலரிடம் பெண்களையும், முதியோர்களையும் சரியான முறையில் நடத்த வேண்டும். முகாமில் உள்ளவர்களின் தேவை அறிந்து செயல்பட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) நெ.சரண்யா, செய்யாறு ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர்கள், மையப் பொறுப்பாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS