BREAKING NEWS

சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மர்ம நோய் தாக்குதலால் கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வளர்ச்சி குன்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மர்ம நோய் தாக்குதலால் கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வளர்ச்சி குன்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூர்,பெரமச்சிபாளையம், சோழக்கவுண்டனூர்,கைகோல்பாளையம், வெள்ளாளபாளையம், மேட்டுப்பாளையம், கோணக்கழுத்தானூர், அம்மாபாளையம், கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, இரமக்கூடல், காவேரிபட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஆலை கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் கடந்த ஒரு மாதமாக கரும்பு பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி கருகி வருகிறது. மேலும் வளர்ச்சி குன்றி கருப்பு நிறத்தில் திட்டு திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் கரும்பு பயிரில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகள் தெளித்தும் பயன் இல்லாததால் விரக்தி அடைந்து ஒரு சில விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு செய்து அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்றாயனூர் தெற்கு தோட்டம் பகுதியில் ஆலை கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது: 10 மாதத்தில் அறுவடைக்கு வரக்கூடிய ஆலைக் கரும்பு சாகுபடி செய்துள்ளோம். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்ய விதை கரணை வாங்குதல், உழவு செய்து பாத்தி அமைத்தல், கரணை போடுதல், கரும்பு பயிர்களுக்கு உரம் இடுதல், மண் சேர்த்தல், சோகை எடுத்தல் என பராமரிப்பு செலவீனங்கள் ரூபாய் 80 ஆயிரம் வரை செலவாகிறது.

இந்நிலையில் தேவூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரியில் தற்போது வேகமாக பரவி வரும் வெள்ளை பூச்சி தாக்குதலுக்கு கரும்பு பயிரில் குருத்து கருகி கருப்பு, மஞ்சள் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் பூச்சிகள் பரவி வருகிறது. இதனையடுத்து பல்வேறு மருந்துகள் தெளித்தும் பயன் இல்லாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மழை காலத்தில் கரும்பு பயிர்கள் செழித்து வளர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தேவூர் பகுதியில் மழை இல்லாததால் கரும்பு பயிரில் வெள்ளை பூச்சிகள் தாக்கி, கரும்பு பயிர்கள் கருகி வளர்ச்சி குன்றி வருகிறது . எனவே அப்பகுதியில் வேளாண்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS