சோற்றுக் கற்றாழை வரலாறு
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். கற்றாழை லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.
கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது.
இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் வளர்கின்றன. நுனியில் பெரும்பாலும் சிறு முட்கள் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை.
அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.
CATEGORIES விவசாயம்
TAGS விவசாயம்