BREAKING NEWS

சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில், பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்

 

 

 

 

ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில், யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு தமிழகம் ஆந்திர தெலுங்கானா கர்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இருந்து அதிக பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். அதன் காரணமாக அடிப்படை வசதி நகராட்சி நிர்வாகம் செய்து வந்தன பக்தர்கள் வருகையால் இரண்டு மாதங்களுக்கு சுங்க வரி வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் பொது ஏலம் விடுவார்கள். தற்போது தமிழக அரசு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவிலுக்கு கம்பி வட ஊர்தி தொடங்கப்பட்ட சிறப்பாக நடைபெற்று வருகிறது இதன் காரணமாக மக்கள் கூட்டம் அதிக அளவில் வருகின்றனர். அடிப்படை வசதி செய்து தரவும் நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஏற்படுத்தும் விதமாகவும் சோளிங்கர் நகராட்சி நிர்வாகம் ஓராண்டுக்கான சுங்கவரி வசூல் செய்ய பொதுஏலம் விடப்பட்டது . இதில் ஏலத்தொகையாக 25 லட்சம் ஏலம் துவங்கப்பட்டு பின்னர் அதிகபட்சமாக 42 லட்சத்து 7000 ரூபாயில் ஏலத் தொகை‌ போனது.அதனை தொடர்ந்து பேசிய ஆணையர் கம்பி வட சேவையால் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர் அவர்களுக்கு ஏற்றார் போல் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்பதற்காவும் நகராட்சிக்கு வருவாய் ஏற்பட்த்தும் வகையில் சுங்கவரி பொது ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள். நிர்ணயம் பண்ண தொகையை வசூலிக்க வேண்டும் மீரும் பட்சத்தில் ஏலத்தின் நிபந்தனைகள் படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து தரப்படும் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS