சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி சிலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார், தேசிய கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் நகராட்சி வளாகத்தில் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
இதில் காங்கிரஸ் நகர தலைவர் , நகராட்சி துணைத் தலைவர் , நகராட்சி ஆணையர் ,பொறியாளர் , நகராட்சி பணி மேற்பார்வையாளர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்
CATEGORIES ராணிபேட்டை