BREAKING NEWS

ஜூனியர் என் டி ஆர், கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் கைகோர்க்கும் படத்தின் போஸ்டர் வெளியானது!

ஜூனியர் என் டி ஆர், கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் கைகோர்க்கும் படத்தின் போஸ்டர் வெளியானது!

கனவு திட்டம், கனவு நாயகன்: ஜூனியர் என்.டி.ஆருடன் கை கோர்க்கும் பிரசாந்த் நீல்!

இயக்குநர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. NTR31 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், “இது 20 ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் தோன்றிய யோசனை, ஆனால் படத்தின் பரிமாணம் மற்றும் பிரம்மாண்டம் என்னைத் தடுத்து நிறுத்தியது. இறுதியாக எனது கனவுத் திட்டத்தை எனது கனவு நாயகனுடன் உருவாக்குவதற்கான களம் அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராகி இருக்கிற ஜூனியர் என்.டி.ஆரும் கே.ஜி.எஃப் படம் மூலம் கவனம் ஈர்த்துள்ள இயக்குநர் பிரசாந்த் நீலும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரசாந்த் நீல், இப்போது பிரபாஸ் நடிக்கும் `சலார்’ படத்தை இயக்கி வருகிறார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )