BREAKING NEWS

ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.

ஜெயங்கொண்டத்தில் கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலம் அகற்ற உறுதிமொழி ஏற்பு.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை மாற்றிட கழிவு நீரை தானியங்கி வாகனங்கள் மூலமாக அகற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நகராட்சி ஆணையர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.

 

இதில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி குழுமத்தின் தாளாளர் டாக்டர் த.முத்துக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். இதில் மனிதர்களை கொண்டு கைகளால் மனித கழிவுகளை அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மீறப்படும் குற்றங்களுக்கு ஜாமினில் வர அனுமதி கிடையாது இதற்கு ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம் என்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14420 -ல் பதிவு செய்து பயன் பெற வேண்டும் என்றும் நாம் கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்ய தானியங்கி கழிவுநீர் அகற்றும் வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் நகராட்சி மற்றும் மோட்டார் வாகன அலுவலகத்தில் பதிவு பெற்ற கழிவுநீர் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டது

இந்நிகழ்வில் நகராட்சி களப்பணி உதவியாளர் விஜயக்குமார் மற்றும் சுமார் 200 -க்கும் மேற்பட்ட ஜெயங்கொண்டம் அன்னை தெரேசா செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
செய்தியாளர் வேல்முருகன்

Share this…

CATEGORIES
TAGS