BREAKING NEWS

டான் சக்சஸை சூப்பர்ஸ்டாருடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்… ரஜினி உடனான சந்திப்பு.

டான் சக்சஸை சூப்பர்ஸ்டாருடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்… ரஜினி உடனான சந்திப்பு.

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த சிவகார்த்திகேயன் அவருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.


இப்படம் கடந்த மே 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி இருந்த இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

 

டான் படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த வகையில் டான் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் படக்குழுவை அழைத்து பாராட்டி இருந்தார். மேலும் அப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பார்க்கும் போது எமோஷனல் ஆகி கண்ணீர் சிந்தியதாகவும் அவர் கூறி இருந்தார்.

 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த சிவகார்த்திகேயன் அவருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: இந்திய சினிமாவின் டான் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றேன். அந்த 60 நிமிடங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். நேரம் ஒதுக்கி, பொன்னான வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு நன்றி தலைவா” என பதிவிட்டுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )