BREAKING NEWS

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்

டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர்
தமிழக முதல்வரின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், சீருடைகள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
டிக்டோ ஜாக் அமைப்பினர் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ள வரும் நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் முதன்மைச் செயலரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்களைக் கூறி ஏன் நிறுத்தப்பட்டது என்றும், ஏறத்தாழ 60 லட்சம் மாணவர்களை மனதில் வைத்து, உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து பேசி சொல்லுமாறும், அதற்கான முயற்சி எடுப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினாலும், முறைப்படி பதில் எதுவும் வரவில்லை. மத்திய அமைச்சரிடம் என்ன பதில் வருகிறது என்பதைப் பார்த்து, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார் அமைச்சர்.

CATEGORIES
TAGS