BREAKING NEWS

டி. பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைபள்ளி புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திறந்துவைத்தார்

மயிலாடுதுறையில்,கடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவந்த, அரசு உதவி பெறும்.டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலை. புதிதாக ரூ- 15 கோடி செலவில் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. முழுவதும், இப்படித்த முன்னாள் மானவர்களால் பொருளுதவி செய்யபட்டு கட்டபட்டு உள்ளது. இப்பள்ளியின் திறப்பு விழாவை முன்னிட்டு,பள்ளியின் தாளாளர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மகாபாரதி புதிய பள்ளி கட்டிடத்தை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.விழாவில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராஜ்குமார்,நகரமன்ற தலைவர் செல்வராஜ், மற்றும்,பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள்,முன்னாள் மானவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

https://youtu.be/QBJAY4i22A8

Share this…

CATEGORIES
TAGS