BREAKING NEWS

டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

டெங்கு தினத்தை முன்னிட்டு,டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த சில்ரன், ஏகம் பவுண்டேஷன் ஆகியன சார்பில் நடைபெற்ற மகளிர் நலன் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மகளிர் தையல் பயிற்சி மைய ஆசிரியர் சுலோச்சனா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேங்கோரஞ் எஸ்டேட் மருத்துவமனை மருத்துவர் சர்மிளா பேசும்போது மகளிர்கள் குடும்பத்தை பராமரித்து வருவதற்கு அளிக்கும் முக்கியத்துவம் தன்னை பாதுகாக்க பராமரிக்க ஒதுக்குவ்தில்லை. இதனால் மகளிர்கள் நோய் தாக்கத்துக்கு ஆளாகின்றனர்.
மாதவிலக்கு காலங்களில் தங்களை முறையாக, முழுமையாக தூய்மைபடுத்தி கொள்ள வேண்டும். இரத்த போக்கு, வெள்ளைபடுதல், கர்ப்பப்பை சார்ந்த நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். போதிய ஊட்டசத்து உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது ஊட்டச்சத்தான உணவு எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி பெறப்படுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள முடியும். ரத்த உற்பத்திக்கு கீரை வகைகள் எலும்புகள் பலப்பட கால்சியம் கலந்த உணவுகள், கர்ப்பப்பை சுத்திகரிக்க பூசணி உள்ளிட்ட உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் வரும்போது இரத்த உறைவு இருக்காது. எனவே டெங்கு காய்ச்சலின் பொது ஏற்படும் உடல் வலி போக்கும் வகையில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி அதிக டோஸ் மாத்திரைகள் எடுத்து கொள்வதால் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும். இவற்றை தவிர்த்து மருத்துவர் அனுமதியுடன் உரிய மருத்துவம் எடுத்து கொள்ளவதால் முழுமையாக குணமடைய முடியும் என்றார்.

ஆல் த சில்ரன் அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது டெங்கு நோய் ஏடிஸ் கொசு மூலம் பரவுகிறது. எனவே இந்த கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களான சிரட்டை, பழைய பத்திரங்கள், டயர்கள், பாக்கு மட்டைகள், போன்றவற்றில் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பேசும்போது.டெங்கு மற்றும் மகளிர் சார்ந்த நோய்களுக்கு உரிய பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வந்தால் நோயின் தாக்கம் அதிகரிக்காமல் முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற முடியும். நோயின் தாக்கம் முற்றிய நிலையில் மருத்துவம் பார்க்க முடியாது என்றார்.
நிகழ்ச்சியில் தையல் பயிற்சி மைய மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS