BREAKING NEWS

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை புரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளம் மற்றும் சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பு

3-வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி டெல்லியில் உள்ள ஜே.டி.உள் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி மாதம் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது இதில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகளில் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பல பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் பங்கேற்ற (music forms) and (creative forms) ஆகிய பிரிவுகளில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி வர்ஷூனி தங்கம் பதக்கம் மற்றும் 12 வயது சங்கிதா வெள்ளி பதக்கம் 13 வயது லக்ஷனா மற்றும் 12 வயது லேகா ஸ்ரீ ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பதக்கங்களை வென்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த பள்ளி மாணவிகளுக்கு வாலாஜாபேட்டை யுத்த கலை இன்டர்நேஷனல் சிலம்பம் அகாடமி பயிற்சியாளர் சத்தியமூர்த்தி பூ மாலைகளை அணிவித்து மேளதாளம் அடித்து சிலம்பம் ஆடியபடி ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் இருக்கும் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..

CATEGORIES
TAGS