உடையகுளம் புதூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உடைய குளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார்
காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சக்தி விநாயகம் முருகேசன் தலைமை காவலர்கள் ராஜா சங்கர் ஆகியோர் போதை பொருள் தடுப்பு குறித்தும் போதையால் ஏற்படக்கூடிய தீமைகள் மற்றும் இதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் குடியால் குடும்பங்கள் பாதிக்கப்படுவது குறித்தும் விபத்துக்கள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு இடையே கருத்துரை வழங்கினர் பிறகு 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் சக்தி விநாயகம் முருகேசன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்