தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாய நிலை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று தஞ்சையில் தேரோடும் வீதிகளான தெற்குவீதி மேலவீதி வடக்கு வீதி கீழவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மழைநீர் வடிகால்கள் கழிவுநீர் சாக்கடைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
ஆனால் கடந்த ஐந்து மாதங்களாக அந்தப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது இதனால் அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் குளம்போல் தேங்கி நின்று நோய் பரப்பும் சூழ்நிலையில் உள்ளது.
இதன் மூலம் வீடு கோவிலுக்கு செல்வோர் வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கோவில் பள்ளிகளுக்கு செல்வோர் என பல்வேறு தரப்பிரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் பணிகளை உடனே அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.