தஞ்சாவூர்
அழிந்து வரும் கைவினைக்கலை நெட்டி தொழிலை மீட்டெடுக்கும் குடும்பத்தினர்.
தஞ்சாவூரில் சரபோஜி கல்லூரி பகுதியில் வசித்து வருபவர் ராதா (ஆண்65) இவருடைய மனைவி எழில்விழி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், கோகுல் நெட்டி ஒர்க்ஸ் என்ற பெயரில் கடந்த 45 வருட காலமாக நெட்டி கைவினைத் தொழிலை குடும்பத்துடன் செய்து வருகிறார், நெட்டி என்பது குளங்கள், ஏரிகளில் தண்ணீரில் பச்சையாக வளரும் ஒரு வகை செடி ஆகும், இந்தவகையான நெட்டி தமிழ்நாட்டில் சிறிய அளவு(size) வகைகள் மட்டுமே கிடைக்கும்,ஆனால் ஆந்திரா ராஜமுந்திரி கொல்கத்தா ஆகிய இடங்களில் பெரிய அளவுகளில் கிடைக்கின்றது, இவ்வகையான நெட்டியை அங்கிருந்து தந்தம் போன்ற பகுதியாக வாங்கி பதப்படுத்தி அவற்றை துண்டாக்கி நெட்டி வேலைப்பாடுகளை செய்து வருகின்றனர் இக்குடும்பத்தினர், இந்த நெட்டி வேளையில் கல்லணை வடிவமைப்பு, பெரியகோவில்,கீதா உபதேசம், மகாமக குளம், ஸ்ரீரங்கம் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மனுநீதி சோழன் மற்றும் கொள்ளிடம் பாலம், ஆழியாறு அணை உள்ளிட்டவைகளை செய்துள்ளனர்,மேலும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் அவற்றையும் செய்து தருகின்றனர், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பரிசாகவும் இந்த நெட்டி வேலைப்பாடு வழங்கப்பட்டுள்ளது, முழுவதும் கைவேலைப்பாடு மட்டுமே கொண்ட இத்தொழில் அழிந்து வரும் கைவினை கலைகளில் ஒன்றாக உள்ளது, இவற்றை தொழில்முனைவோர்கள், மற்றும் மகளிர் குழுக்களுக்கு பயிற்சி அளித்தால் வருமானம் ஈட்டுவதோடு,இந்த கைவினை கலைகளையும் மீட்டெடுக்கலாம் என்று தெரிவிக்கின்றனர், மாநில விருது, குழு விருது ஆகியவற்றையும் இவர் பெற்றுள்ளார், தற்போது தேசிய அளவிலான விருதுக்கு விண்ணப்பித்து தஞ்சை பெரிய கோவில் கட்டுமான பணி மற்றும் கீதா உபதேசம் ஆகியவற்றை கைவேலைப்பாடுடன் நெட்டியை கொண்டு உருவாக்கியுள்ளார், இந்த நெட்டி வேலைப்பாடு கைவினைத் தொழிலுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரமும் 2020ம் ஆண்டு இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.