BREAKING NEWS

தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்த அப்பர் சதய தேர்திருவிழா விபத்து தொடர்பாக விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழு வாக்குமூலம் பெற்று அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.

தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்த அப்பர் சதய தேர்திருவிழா விபத்து தொடர்பாக விபத்தில் காயமடைந்தவர்களிடம் ஒரு நபர் குழு வாக்குமூலம் பெற்று அதனை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த ஏப். 27ம் தேதி அதிகாலை அப்பர் சதய தேர் திருவிழாவின் போது, தேர் மின்கம்பியில் உரசி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் இறந்தனர். இதில், 24 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காக தமிழக அரசு சார்பில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 30ம் தேதி, விபத்து நடந்த களிமேடு கிராமத்திற்கு முதன்மை செயலாளர் குமார் ஜெய்ந்த் சென்று தீயில் தேரை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மே.1ம் தேதி விபத்தில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்தார். தொடர்ந்து, கிராம மக்கள், அலுவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, மீண்டும் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த குமார் ஜெய்ந்த், காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டார். இதன்படி, காயமடைந்தவர்களில் 19 பேரிடம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில், தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. இப்பணியை 6 தாசில்தார்கள் மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடந்தது.

இது குறித்து குமார் ஜெயந்த் நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது இரண்டாவது முறையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை முடிந்து, தற்போது நல்ல நிலைமையில் இருப்பதால், அவர்களிடம், தேர் விபத்து எப்படி நடந்தது. காயமடைந்தவர்கள் எங்கு இருந்தார்கள் போன்ற பல்வேறு தகவலும் கேட்டு பெறப்பட்டது.

அதிகாரிகளிடம் பெறப்பட்ட அறிக்கைகள், காயமடைந்தவர்களிடம் பெறப்படும் வாக்குமூலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, முழுமையான அறிக்கையை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க உள்ளேன். இதுவே, பொதுமக்களிடம் விசாரிக்கப்படும் இறுதிக் கட்டமாகும். வருங்காலங்களில் இதுபோன்ற விபத்து நடக்கக் கூடாது என்பதற்காக வழிமுறைகளை தயார் செய்து, அதையும் அறிக்கையுடன் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )