தஞ்சை வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் நடத்தும் மர குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், சங்கரம் பூஞ்சை கோட்டை தெருவில் அமைந்துள்ள வேல்அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் மரக்குடில் லைப் ஸ்டைல் துவக்க விழா நடைபெற்றது.
இயற்கை வாழ்வியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்தோஷ் குமார் வரவேற்பு உரை ஆற்றினார், சுப்ரா ஸ்கூல் ஆஃப் யோகா நிறுவனர் டாக்டர் சுப்பிரமணியன் நாச்சியப்பன் தலைமை உரையாற்றினார்,மேலாண்மை குழு பூண்டி புஷ்பம் கல்லூரி வீரராகவ மேல்நிலைப்பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் பூண்டி தனசேகரன் வாண்டையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மைன்ஸ் சர்ஜெரி மைண்ட் கிளினிக் உளவியல் நிருபர் டாக்டர் சிவா கருத்து விளக்க உரையாற்றினார்,அக்குபிரஷர் பாத சிகிச்சை திண்டுக்கல் புஷ்பா மேரி, வர்ம மருத்துவம் கோவை பிரியா சஜுவ் யோகா மற்றும் இயற்கை உணவு ஆலோசகர் தஞ்சாவூர் முத்து சேதுராமன், ஆதி பேஸ் யோகா ஆதி நேச்சுரல்ஸ் கோவை நிறுவன சுபா ஸ்ரீ அஜித் வேல், ஆடுதுறை ஆசிரியர் தங்க கண்ணன் ஆகியோர் நிகழ்வு கலந்து கொண்டனர் வாழ்த்துரை வழங்கினார்கள், நிறைவாக வேல் அமிர்தம் கம்யூனிட்டி காலேஜ் இயக்குனர் இன்ஜினியர் எம் எஸ் அஜித்வேல் நன்றியுரை ஆற்றினார்.