தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல்.

தடை இல்லா மின்சாரம் வழங்கக்கோரி சோழம்பேட்டை விவசாயிகள் மூவலூரில் சாலை மறியல் – மயிலாடுதுறை To கும்பகோனம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சோழம்பேட்டையில் கடந்த 15 தினங்களாக மின் தட்டுபாடு அதிகமாக உள்ளதாலும், மேலும், குறைந்த அமுத்த மின்சாரம் இருப்பதாலும், மின் மோட்டார்கள் பாதிப்பதால், விவசாய பணிகள் பாதிப்பதாலும், குடிநீர் பற்றாகுறை ஏற்படுவதால் மின்சார துறையை கண்டித்து சோழன் பேட்டை விவசாயிகளும் பொதுமக்களும் மூவலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலுக்கு சோழம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் இராமமூர்த்தி தலைமை வகித்தார். சாலை மறியலில் தமிழக அரசை கண்டித்தும், தமிழக மின்சார வாரியத்தை கண்டித்தும் முழக்கமிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் மயிலாடுதுறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருப்பதி பேச்சுவார்த்தை நடத்தியதை முன்னிட்டு சாலை மறியலி ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் மயிலாடுதுறை To கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் 100க்கு மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டதால் அப்பகுதியில் மிகவும் பரப்பரப்பாக காணப்பட்டது