BREAKING NEWS

தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .

தந்தையை சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் பரபரப்பு .

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் கிருஷ்ணவேணி தம்பதியின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டது இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை தூக்கி வந்தனர் காலை ஆறு மணி முதல் 10:30 மணி வரை மருத்துவர்கள் யாரும் மருத்துவம் பார்க்க வரவில்லை அங்கே இருந்து மருத்துவ செவிலியர்கள் வெளியில் சென்று மருந்து வாங்கி வருமாறு ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த ரத்தினகுமார் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் அரசு மருத்துவமனை எதிரே ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ரத்தினகுமார் மற்றும் உறவினர்களை சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்து மருத்துவமனை உள்ளே சென்றனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. விடியல் ஆட்சி விடியல் ஆட்சி என்று கூறும் தமிழக அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இதுதான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS