BREAKING NEWS

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தாய் மாமன் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர்வரிசை கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தாய் மாமன் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சீர்வரிசை கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எஸ்.கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் மோகனாம்பாள் தம்பதியரின் மகள் ஹரிணி பூப்பெய்து நிலையில் பூப்பு நன்னீராட்டு விழா. இன்று நடைபெற்றது

 

கோபிசெட்டிபாளையம் புதுக்கரை புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டது.

இந்த விழாவிற்கு ஹரிணியின் மாமன்களான பூஞ்சோலை ரஞ்சித் செல்வம் பரமேஸ்வரன் ஆகியோர் , தாய் மாமன் சீர் வரிசையை பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் மேளதாளங்களுடன் கணபதிபாளையம் முதல் புதுக்கரை புதூர் வரை உள்ள திருமணமண்டபம் வரை சுமார் 3 கிமீ தூரம் கொண்டு வந்து அசத்தியுள்ளனர்.

மேலும் பூபெய்தா ஹரிணியை உறவினர்கள் மற்றும் நண்பர்களை மாட்டு வண்டியிலேயே அழைத்து வந்து சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

தாய்மான் சீரை மாட்டு வண்டியில் கொண்டு வந்தது மட்டுமின்றி உறவினர்களையும் மாட்டு வண்டியில் அழைத்து வந்ததை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் அதிசயத்துடனும் பார்த்து ரசித்தனர்.

CATEGORIES
TAGS