BREAKING NEWS

தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பயண பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் மு. அருணா ஆய்வு மேற்கொண்டார்…

தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் இயக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் நடைப்பெற்ற ஆய்வில் மாவட்டத்தில் உள்ள 140 பள்ளி மினி பேருந்துகள், பெரிய பேருந்துகளில் இன்று 110 பள்ளி பேருந்துகள் ஆய்வுக்குட்ப்படுத்தப்பட்டன.

மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா பேருந்துகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் பேருந்து இருக்கை, அவசர கால வழி, முதலுதவிப்பெட்டி, தீயணைப்பு சிலிணடர், வேக கட்டுப்பாட்டு கருவி உட்பட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான சோதனைகள் செய்யப்பட்டது.

இதில் முறையாக பராமரிக்கப்படாத பள்ளி பேருந்துகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்துகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு தீ அணைப்பானை வைத்து தீயை அணைப்பது குறித்த செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு துறையினர் பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS