BREAKING NEWS

தமிழகம் விளையாட்டு துறையில் வளர்ந்து வருவதாக டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற வீரர் தெரிவித்தார்.

தமிழகம் விளையாட்டு துறையில்  வளர்ந்து வருவதாக  டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற வீரர் தெரிவித்தார்.

தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின்
பதவியேற்ற பிறகு தான் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக தமிழகம்
விளையாட்டு துறையில் வளர்ந்து வருவதாக
ராமநாதபுரம் மாவட்டத்தில்
தேசிய அளவில் நடைபெற்ற
டென்னிஸ் பால் கிரிக்கெட்டு போட்டியில் பங்கு பெற்ற
வீரர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற
34 வது தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில்
32 மாநிலங்கள்
பங்கு பெற்ற நிலையில்,
தமிழக அணியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த
ராஜ்குமார் ஆனந்தன், பாரத், சதீஷ்,ரோஷினி. ஆகியோர்கள்
கலந்துகொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் அணியானது
வெற்றி பெற்று தமிழகத்திற்கு,
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் இப்போட்டியில்
வெற்றி பெற்ற வீரர்களுக்கு
ராமநாதபுரம் மாவட்ட
திமுக MLA காதர்பாஷா ( எ)முத்துராமலிங்கம்
சிறப்பு அழைப்பாளராக
கலந்து கொண்டு கோப்பை வழங்கி
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இப்போட்டிய குறித்து விளையாட்டு வீரர் ராஜ்குமார்ஆனந்தன், கேட்டபோது கடந்த மாதம்
நேபாளத்தில் நடைபெற்ற
ஆசியா அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும்,
அதேபோன்று இப்பொழுது நல்ல முறையில் விளையாடி தமிழகத்திற்கு நாங்கள் வெற்றி சேர்த்துள்ளதாகவும்,
தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகுதான்
இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக தமிழகம்
விளையாட்டுத் துறை
வளர்ந்து வருவதாக
பெருமிதம் கொண்டார்.

CATEGORIES
TAGS