தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளரும் மாவட்ட பொறுப்பாளருமான பாலாஜி தலைமை வகித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர்
புஸ்ஸி ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் மற்றும் பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்