BREAKING NEWS

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின்’ மாநிலத் தலைவர் ஜி.கே. ஸ்டாலின் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
இதனையடுத்துத் தற்காலிகத் தலைவராகக் கிறிஸ்டோபர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில அளவிலான மூன்றாவது நிர்வாகக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சங்கக் கட்டடத்தில் (சி ஐ டி யூ) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வயது முதிர்வு காரணமாகத் தாமாக முன்வந்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.கே. ஸ்டாலின் பதவி விலகினார். அவருக்கு பதிலாக நெல்லையை ச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கிறிஸ்டோபர் தற்காலிகத் தலைவராக ஒரு மனதோடு தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், குடும்பச் சூழல் மற்றும் இதர காரணங்களையொட்டி நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு அடிப்படை உறுப்பினர்களாக மட்டுமே தொடர்வதாகக் கடிதம் கொடுத்திருந்த பரமகுரு போஸ் (தேனி) உள்ளிட்ட ஐந்து பேரின் பதவி விலகல் கடிதம் நிர்வாகக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்குரிய காலி இடத்தில், பிலால் (பேரணாம்பட்டு), உத்திரகுமார் (விழுப்புரம்), கருணாநிதி (ராணிப்பேட்டை), உத்தமன் (செங்கல்பட்டு), மற்றும் பாரத் கமலவேல் (திருநெல்வேலி) ஆகியோர் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

துணைப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்த மனோகரன் மறைவெய்தியதையொட்டி அவருக்கு பதிலாக விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் துணைப் பொதுச் செயலாளராக ஒரு மனதுடன் நியமிக்கப்பட்டார்.
-இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், சங்கத்தால் உறுப்பினர்களுக்குக் கிடைக்கக் கூடிய அனுகூலங்கள் பற்றியும் ‘தமிழ்நாடு ஓய்வூதியப் பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின்’ தலைவரும் சிறப்பு அழைப்பாளருமான பி.ஆர். சுப்பிரமணி எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் துணைச் செயலாளர் எஸ்.பி.கோபிநாத், மாநிலப் பொருளாளர் இந்திரக் குமார், ஆகியோரும் சங்கத்தின் வளர்ச்சி குறித்து உரையாற்றினர்.
கிளைகள் இல்லாத மாவட்டங்களில் கிளைகளைத் தொடங்குவது,உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது,2023-24 –ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு – செலவு கணக்குத் தணிக்கைக்கு (ஆடிட்டிங் ரிப்போர்ட்) ஏற்பாடு செய்வது,மூத்த பத்திரிகையாளர்களைக் கொண்டு இளம் பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது வகுப்பெடுப்பது,வருகிற ஜூலை மாதம் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

‌முன்னதாகப் பொதுச் செயலாளர் இரவிச்சந்திர ஹாசன் கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை வரவேற்றார்.
இறுதியில் நிர்வாகக் குழு உறுப்பினர் பத்ரி ராஜ் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS