தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம்
மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, உலகநாதன் ,பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏதேனும் உடல் நிலைகுறைவால் உயிரிழந்தால் அந்த குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 50 குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம் குடும்ப நல நிதியினை வழங்கினார்கள். இதைப்போல ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் இறந்த சுமைதூக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பணியின் போது சிறு சிறு விபத்து ஏற்படுகிற போது உரிய மருத்துவ செலவும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், நெல் கொள்முதல் மையங்களில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தி ஓய்வு கால பயன்கள் வழங்க வேண்டும், விரும்பத்தகாத ஒரு சில சம்பவங்களில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் நிலையில் அரசின் திட்டங்களில் பணியாற்றி பணியின்போது உடல் நல குறைவினால்/ விபத்துகளினால் மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த பேரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.