தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
பேரணாம்பட்டில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
வேலூர், ஆக.7-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, பேரணாம்பட்டு நகரம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகரத் தலைவர் அப்துல் சமத் தலைமையில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. மமக நகர செயலாளர் சகீர் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், பேர்ணாம்பட்டு நகர மன்ற உறுப்பினருமான ஆலியார் சுல்தான் அஹ்மத், மாவட்ட பொறுப்பாளர் ரமீஸ் அஹ்மத் , மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மத் ரகீப் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் பேரணாம்பட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக விரைவில் ஆம்புலன்ஸ் வாங்குவது மற்றும் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள், துணை நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர செயலாளர் முஹம்மத் சமீர் நன்றியுரையாற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவுபெற்றது.