தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை திமுக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் அதிகளவில் புழங்குவதாகவும், ஆளும் திமுக அரசு அவற்றை தடுக்க தவறியதாகவும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏற்கனவே கண்டன ஆர்பாட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உழவர் சந்தை முதல் ஆயில் மில் வரை அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
CATEGORIES திருவள்ளூர்
TAGS மாவட்ட செய்திகள்